மனிதப்புதைகுழிகளை அகழ்வதில் இலங்கை மிகவும் பலவீனமான கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இந்தக் குறைபாடுகளைக் களைவதுடன், தேசிய மரபணுத் தரவுத்தளம் ஒன்றையும் இலங்கை உருவாக்கவேண்டும் இவ்வாறு ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் உள்ளதாவது:-
இலங்கையில் தற்செயலான நடவடிக்கைகளின் போது 17 மனிதப்புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனினும், அங்கு முறையான அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலைமை காணப்படுகின்றது. குறிப்பாக, அதிகாரிகளிடையே வரையறுக்கப்பட்ட தடயவியல் திறனே காணப்படுவதுடன், தேசிய மரபணுத் தரவுத்தளம் இல்லாதமை பெரும் குறைபாடாக அமைந்துள்ளது.
புதைகுழிகளைக் கண்டுபிடித்து அகழ்வுப் பணிகளை மேற்கொள்ளவும், ஆய்வுகளை முன்னெடுக்கவும். விசாரணைகளைச் செய்வதற்கும் விரிவான உத்திகளை இலங்கை வகுக்கவேண்டும். இதற்கு தேசிய நிறுவனங்களின் தகுதியையும், திறமையையும் மேம்படுத்துவதுடன் உரிய தொழில்நுட்ப உதவிகளையும் பெற்றுக்கொடுக்க வேண்டும் – என்றுள்ளது.