போதைவஸ்தால் ஆட்சி நடத்திய பொல்லாத நாடு இலங்கை! – பா. அரியநேத்திரன்

இலங்கையை போதைப்பொருளால் சீரழித்தவர்கள் 2024 க்கு முன்பு ஆட்சிசெய்த அனைத்து ஜனாதி பதிகளும் இதனை பொறுப்பேற்க வேண்டும். 2024,நவம்பர்,14, க்கு பின்னர் தற்போதைய ஆட்சியில் உள்ள தேசிய மக்கள் சக்தி அரசு போதைபொருள் பாவனையை தடுக்க பெருமளவில் நடவடிக்கை எடுப்பதால் பல அதிர்ச்சியூட்டும் உண்மைகளை காண முடிகிறது.
போதைப்பொருட்கள் வகை:
நமக்கு தெரிந்ததெல்லாம்  அபின்,சாராயம், கஞ்சா, கசிப்பு,வீடி, சுருட்டு,கள்ளு, நிஜாம் பாக்கு, புகையிலை,மற்றைய மதுபான வகைகள்.இலங்கையில் 1505, ம் ஆண்டு போத்துக்கேயர் இலங்கையை ஆக்கிரமித்த காலத்தில்தான்  பின் எனும் போதைப்பொருட்களின் அறிமுகமாகி அடிமை யானவர்கள் இருந்தனர் என கூறப்படுகிறது.ஆனால் இப்போது இலங்கையில் பிடிபடும் பொதைபொருட்களின் பெயர்களை கேட்டாலே ஆச்சரியமும், அதிர்ச்சியும் எழுகிறது. அந்த போதை பொருட்களின் பெயர்களை பாருங்கள்:
1. ஹிஷிஸ் போதைப்பொருள்.
2. ஐஸ் போதைப்பொருள்.
3. குஷ் போதைப்பொருள்.
4. ஹெரோயின் போதைப்பொருள்.
5. காஃவீன் போதைப்பொருள்.
6. கோகோயின் போதைப்பொருள்.
7. எத்தனால் போதைப்பொருள்.
8. நிக்கோட்டீன் போதைப்பொருள்.
9. மரிஜுவானா போதைப்பொருள்.
10. மிட்மா போதைப்பொருள்.
11. கேட்டமைன் போதைப்பொருள்.
12. கிரிஸ்டல் மெத் போதைப்பொருள்.
13. கோகைன் போதைப்பொருள்.
14. அல்கஹால் போதைப்பொருள்.
15. லைசெர்ஜிக் போதைப்பொருள்.
16. ஸ்பீட்பால் போதைப்பொருள்.
17. மெபெட்ரோன் போதைப்பொருள்.
இன்னும் எத்தனை பெயரில் போதைவஸ்துக்கள் உள்ளன என்பது அத்தனையும் இலங்கைக்கு மாத்திரை கைளாக,  தூளாக, கட்டியாக, திரவமாக, குழம்பாக, பாதாள உலகக்குழுக்களாலும், கடத்தல்காரர்களாலும் கொண்டுவரப்படுவது சர்வசாதாரணமாக கடந்த பல வருடங்களாக இடம்பெறுகிறது.
போதைப்பொருட்களை  வெளிநாடுகளில் இருந்து மொத்தமாக இறக்குமதி செய்து இலங்கைக்கு விநியோகித்து வரும் 30 முக்கிய போதைப் பொருள் வர்த்தர்களை  காவல்துறை அடையாளம் கண்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் உடுபாய், இந்தியா பாகிஸ்தான் நாடுகளில் இருந்தவாறு இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த வாரம் (29/10/2025) சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க ஒரு கருத்தை வெளியிட் டார். இலங்கையில் பாடசாலை மாணவர்கள் 237980 பேர் போதைவஸ்து பாவனைக்கு அடிமையாகி உள்ள னர் என்ற அதிர்ச்சி தகவல் அவரால் கூறப்பட்டது. அதில் பெரும்பாலும் கொழும்பு மாவட்டத்தை உதாரணமாக அவர் எடுத்தாலும் வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் தமிழ் மாணவர்கள் இப்போது போதைவஸ்துக்களுக்கு பலர் ஆட்கொள்ளப்படுவதை காணமுடிகிறது. பொது வாக போதைவஸ்து பாக்குகளை பாவித்து பாடசாலைக்கு சென்ற பல மாணவர்கள் அதிபர், ஆசிரியர்களால் எச்சரித்த பல சம்பவங்கள் நடந்துள்ளன.
இலங்கையில் போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றிலும் ஒழிப்பதை குறிக்கோளா கக் கொண்டு தேசிய ஆபத்தான போதைப் பொருள் கட்டுப்பாட்டு சபை (NDDCB) 1984, ல் உருவாக்கப்பட்டது. இந்த சபை தனது செயல் பாடுகளை நிறைவேற்றும் முன்னோடி யான அரசாங்க நிறுவனம் ஆகும்.
ஆனால் இந்த சபை 1984, ல் தொடங் கியதற்கு பின்னர் அந்த காலம் தொட்டு 2009, மே,18, வரை வடகிழக்கில் விடுதலைப்போராட்டம், விடுதலைப்புலிகளின் ஆளுமை உள்ள காலத் தில் இலங்கையில் வடகிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களிலும் வடகிழக்கில் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளிலும் போதைப்பொருட்கள் ஆங்காங்கே சிலரால் இறக்குமதியான சம்பவங்கள் உண்டு.
பின்னர் இலங்கையில் போதைப் பொருள்கள் பற்றி பேசப்பட்டாலும் விடுத லைப் போராட்டம் உக்கிரம் நடந்தமையால் போதைப்பொருள்கள் பற்றிய செய்திகள் வெளிவரவில்லை, போராட்டம், தாக்குதல், என்பன முக்கிய செய்திகளாகின போதைப் பொருள்கள் கடத்தல் தொடர்பான செய்திகள் முக்கியத்துவம் பெறவில்லை.
ஆனால் 2010, தொடக்கம் 2025, வரை தொடர்ச்சியாக போதைபொருள் பிடிபடும் செய்திகள் வந்தாலும் பலர் சுதந்திரமாக ஏற்கனவே இலங்கையை போதைவஸ்துகளால் ஆட்சிசெய்தார்கள் என்பதே உண்மை.  இது நேரடி யான ஆட்சியாளர்களின் ஆசீர்வாதத்து டன் போதை பொருட்கள் நாட்டுக்குள் வரவழைப்ப தும் அதை தயாரிக்கும் தொழிற்சாலை கூட உருவாக்கப்பட்டும் உள்ளது எனில் எந்த அளவில் ஏற்கனவே ஆட்சியில் இருந்த ஜனாதிபதிகளான மகிந்த, மைத்திரி, கோட்டா, ரணில் எவருமே இதனை பூரணமாக கட்டுப்படுத்த எந்த சட்ட நடவடிக்கைகளுக்கும் அக்கறை காட்டவில்லை என்றால் அவர்களின் ஆசீர்வாதம் இல்லாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை.
போதைவஷ்த்து பாவனையை முற்றாக தடுக்காவிடில் எதிர்காலத்தில் இலங்கையில் மட்டுமல்ல எமது தாயகத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பது உண்மை.தற்போது கடந்த 30/10/2025, ல் ஜனாதிபதி அநுர தலைமையில் போதைப்பொருள்களுக்கு எதிரான பரந்த பொதுமக்கள் இயக்கத்தை ஆரம்பித்துள்ளார்.
அரசியலுக்கு அப்பால் எமது வட கிழக்கு தமிழ்மக்கள் போதைப்பொருள்கள் அறவே ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை ஒன்றிணைந்து செயல்படுத்துவது காலத்தின் காட்டாயம்.