இந்தியாவுக்கு எதிரான டொனால்ட் ட்ரம்ப்பின் செயற்பாட்டால் இலங்கையும் பாதிப்பு

அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருட்கள் மீதான அதிக வரியானது, 2026ஆம் ஆண்டில் இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் வளர்ச்சி வீதத்தை குறைவடையச் செய்யுமென உலக வங்கி தெரிவித்துள்ளது.

2025ஆம் ஆண்டில் தெற்காசிய நாடுகளின் வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், வளர்ச்சி 2026ஆம் ஆண்டு 5.8 சதவீதமாகக் கடுமையாகக் குறைவடையும் என்றும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகள் இதற்குள் அடங்குகின்றன.  இந்தநிலையில், அமெரிக்காவிற்குப் பொருட்கள் ஏற்றுமதி செய்வதில், இந்தியா எதிர்பார்த்ததை விட அதிக வரிகளைத் தொடர்ந்து எதிர்கொள்வதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியாவின் ஏற்றுமதிகளுக்கு 50 சதவீத வரியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்தார்.
இந்த நடவடிக்கை புடவை, இரத்தினக்கற்கள் மற்றும் இறால் வளர்ப்பு உள்ளிட்ட தொழிற்துறைகளில் பாரியளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.