இலங்கை – இந்திய உறவு சந்தேகமான நிலையில் உள்ளது: எஸ் சிறிதரன்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு சந்தேகமான நிலையிலேயே உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர், அரசாங்கம் சீனா மீது அதிக பற்றுக்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  எனினும் இந்த புரிந்துணர்வு இந்தியாவுடன் குறைவாகவே உள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாகவே, ‘சிங்களவர்கள் ஈழத் தமிழர்கள் மீது தொடர்ந்தும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்’.
‘இந்தியா மீதான அச்சம் காரணமாகவே சிங்கள தலைவர்கள் ஈழத் தமிழர்களை தாக்குகின்றனர்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘இலங்கைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி விஜயம் மேற்கொண்டாலும், அரசாங்கத்தின் தலைவர்கள் தமிழ் மக்கள் மீது வெறுப்பையே வெளிப்படுத்துகின்றனர்’. ‘இதனடிப்படையில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே சிறந்த நட்புறவு உள்ளதாக தோன்றினாலும், அது சந்தேகமான நிலையிலேயே உள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார்.