டொலர் நெருக்கடியில் இலங்கை – நீண்ட காலத் தீர்வைக்கோரும் இறக்குமதியாளர்கள்

362 Views

டொலர் நெருக்கடியில் இலங்கை

டொலர் நெருக்கடியில் இலங்கை சிக்கியுள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியை பாதிக்கும் டொலர் தட்டுப்பாட்டுக்கு நீண்ட காலத் தீர்வைத் காண வேண்டும் என்று அத்திய அவசியமான உணவுப்பொருட்கள் இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்திய அவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் உறுப்பினர் நிஹால் செனவிரத்ன கருத்து தெரிவிக்கையில்,

‘அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றி வரும் 1.000-1.500 கப்பல் கொல்கலன்களை விடுவிப்பதற்கான கொடுப்பனவுகளை செலுத்த அமெரிக்க டொலர்கள் கிடைக்காத காரணத்தால், தாமதக் கட்டணங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் பல நாட்களாக கொழும்புத் துறைமுகத்தில் தேங்கிக் இருக்கின்றன. துறைமுகத்தில் உள்ள பொருட்களுக்கு செலுத்துவதற்காக 25 மில்லியன் டொலர்களை விடுவிக்குமாறு  இலங்கை மத்திய வங்கியிடம் விடுத்த கோரிக்கையை எளிதாக்குவது தொடர்பாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தனவுடன் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

மேலும் அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து 800 கொள்கலன்களை விடுவிக்க 50 மில்லியன் டொலர்கள் கோரப்பட்ட நிலையில், செப்ரெம்பரில் இதே போன்று இறக்குமதியாளர்கள் நிவாரணம் கோரியிருந்தனர். துறைமுகத்தில் இருக்கும் கொள்கலன்களுக்கு ஒவ்வொரு நாளும் தாமதக் கட்டனம் செலுத்த வேண்டும். இது எங்கள் செலவை, நாம் இறக்குமதி செய்யும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு கிலோவுக்கு 10 அல்லது அதற்கு மேல் அதிகரிக்கச் செய்கிறது. இதனால் நாம் தொடர்ந்து நஷ்டம் அடைய முடியாது. இறக்குமதியை நிறுத்துவதை நாம் பரிசீலிக்க வேண்டியிருக்கலாம். ஆனால் அது நுகர்வோரையே பாதிக்கும்” என்றார்.

Tamil News

Leave a Reply