இராஜதந்திர நோக்கில் சீனாவின் பக்கம் திரும்பியுள்ள இலங்கை-மனித உரிமை கண்காணிப்பகம்

507 Views

இராஜதந்திர நோக்கில் சீனா

இலங்கை அரசாங்கம் அதன் மிக மோசமான சட்டங்கள் மற்றும் கொள்கைகளை மறைப்பதற்கான இராஜதந்திர நோக்கில் சீனாவின் பக்கம் திரும்பியிருக்கின்றது எனத் தெரிவித்துள்ள  மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்தியப் பணிப்பாளர் ஜோன் சிப்டன், பொருளாதார ரீதியில் இலங்கையின் மிக முக்கிய தொடர்புகள் அனைத்தும் அமெரிக்கா, ஜரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடனேயே பேணப்பட்டு வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.

ஆகவே அதனைப் பயன்படுத்தி இலங்கையில் இடம்பெற்ற மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கான அழுத்தங்களைப் பவ்வேறு வழிமுறைகளிலும் பிரயோகிப்பதற்கு அமெரிக்கா முன்வர வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப்பிராந்தியப் பணிப்பாளர் ஜோன் சிப்டன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் பயங்கரவாதத் தடைச்சட்டம் உரியவாறு திருத்தியமைக்கப்படுவதற்கோ அல்லது முழுமையாக இல்லாதொழிக்கப்படுவதற்கோ அவசியமான அழுத்தங்களை அமெரிக்கா தொடர்ந்து வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply