ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கிய ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மேலும் 04 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஐரோப்பிய ஆணைக்குழு நேற்றையதினம் குறித்த தீர்மானத்தை வெளியிட்டுள்ளது.
புதிய ஜி.எஸ்.பி பிளஸ் உடன்படிக்கை தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இணை சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளின் விளைவாக முன்மொழியப்பட்ட நீடிப்பு இது என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது.
குறித்த வரிச்சலுகை இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதியுடன் முடிவடைய இருந்தமை குறிப்பிடத்தக்கது.