அதிநவீன புவியியல் தகவல் அமைப்புகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, அனர்த்தங்களைக் கணித்தல், தயாராகுதல் மற்றும் பதிலளிக்கும் திறனை வலுப்படுத்தும் நோக்கில் “GeoAI for Disaster Resilience” என்ற தேசிய முயற்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நிபுணர்களின் உதவியுடன் இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ நிபுணர்கள் சங்கத்தினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. புதுமைகளைத் தழுவி, மனித வளத்தில் முதலீடு செய்து, GeoAI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் ஊடாக அனர்த்தங்களை முன்கூட்டியே மதிப்பிட்டு அவற்றை தாங்கும் திறன் இலங்கைக்கு ஏற்படும் என அமெரிக்க தூதரகத்தின் இலங்கைக்கான குழுவின் பிரதித் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
அத்துடன், செயற்கை நுண்ணறிவு, தரவு நிர்வாகம் மற்றும் டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பு ஆகியவை தற்போது மக்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் தேசிய ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் பிரதி செயலாளர் வருண ஸ்ரீ தனபால தெரிவித்துள்ளார்.



