பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்த நாடாக மாறியது இலங்கை

248 Views

வரலாற்றில் முதல் தடவையாக பொருளாதாரத்தில் வீழ்ச்சி கண்ட நாடாக இலங்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

விலைவாசி உயர்வு மற்றும் வருமான வீழ்ச்சி போன்றவற்றால் பாதிப்படைந்த இலங்கை கடந்த வியாழக்கிழமை (19) கடனுக்கு செலுத்த வேண்டிய 78 மில்லியன் டொலர்களை செலுத்த தவறியதால் அது பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்த நிலைக்கு சென்றுள்ளது. இலங்கைக்கு 30 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டபோதும் பணத்தை செலுத்த இலங்கை அரசினால் முடியவில்லை.

இலங்கை அரசின் நடவடிக்கைகள் காரணமாக உணவுப்பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதுடன், இலங்கையின் நாணயமும் கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் முதல்முறையாக பொருளாதாரத்தில் வீழ்ச்சி கண்டுள்ளதாக அனைத்துலக நிதி தரப்படுத்தும் நிறுவனமான மூடி என்னும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கையின் பணவீக்கம் எதிர்வரும் மாதங்களில் 40 விகிதமாக அதிகரிக்கலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Tamil News

Leave a Reply