இராணுவ ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது தொடர்பில் இலங்கை மற்றும் சுவிட்சர்லாந்து கலந்துரையாடல்

இலங்கை மற்றும் சுவிட்சர்லாந்து இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் இலங்கை இராணுவ வீரர்களுக்கான பயிற்சி வாய்ப்புகளை அதிகரிப்பது தொடர்பாக கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளன.

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்னவை சுவிஸ் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் பிராங்கோயிஸ் கரோக்ஸ் நேரில் சந்தித்த போது பல விடயங்கள் தொடர்பிலான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

இலங்கையின் சட்டத்தை அமுல்படுத்தும் முகவரகங்கள் இலங்கைக்குள் சட்டவிரோத போதைப்பொருள் ஊடுருவலை தடுப்பதற்கு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் பாதுகாப்புச் செயலாளரினால் இந்த சந்திப்பின் போது விளக்கமளிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், இரு தரப்பினருக்கும் இடையிலான சுமுகமான கலந்துரையாடலின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகள் நினைவுகூரப்பட்டன.