இலங்கை:2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண பரீட்சைகள் இன்றையதினம் ஆரம்பம்

இலங்கையில்  முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3568 பரீட்சை நிலையங்களில் இந்த பரீட்சைகள் ஆரம்பமாகியுள்ளன. அந்தவகையில் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி மற்றும் அராலி சரஸ்வதி இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் அமைந்துள்ள பரீட்சை நிலையங்களிலும் இவ்வாறு பரீட்சைகள் ஆரம்பமாகியுள்ளன.

இந்த பரீட்சையில் நாடளாவிய ரீதியில் 4 இலட்சத்து 72 இரண்டாயிரத்து 553 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர். இதில் 3 இலட்சத்து 94 ஆயிரத்து 450 பரீட்சார்த்திகள் பாடசாலை பரீட்சார்த்திகள் என்பதுடன், 78 ஆயிரத்து 103 பரீட்சார்த்திகள் தனியார் பரீட்சார்த்திகள் ஆகும்.

க.பொ.தராதரப் பத்திர சாதாரணதர பரீட்சை இன்று  ஆரம்பித்த நிலையில் வவுனியாவில் 4480 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுவதுடன் அவர்களுக்காக 40 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை நாடாளாவிய ரீதியில் ஆரம்பித்துள்ளது. அந்தவகையில் வவுனியா மாவட்டத்திலும் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்துசெய்யப்பட்டு பரீட்சை செயற்பாடுகள் ஆரம்பித்திருந்தது.

இம்முறை சாதாரண தரபரீட்சைக்கு வவுனியாவில் 4480 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளதுடன், அவர்களுக்காக 40 பரீட்சை மத்தியநிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 14 இணைப்பு காரியாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

குறித்த பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் 472553 பேர் தோற்றவுள்ளனர். இவர்களில் 394450 பாடசாலை பரீட்சார்த்திகளும், 78103 தனியார் பரீட்சார்த்திகளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.