அமெரிக்க தூதுவர் – திறைசேரி செயலாளருக்கிடையில் விசேட சந்திப்பு

சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டு எட்டப்பட்டதையடுத்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் மற்றும் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பொன்று நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் சமீபத்திய அங்கீகாரம் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை, மீட்சியை ஊக்குவிப்பதற்காக வேலைத்திட்டம் என்பவற்றை உறுதிசெய்ய தேவையான மாற்றங்களை நடைமுறைப்படுத்துவதற்கான இலங்கையின் திட்டங்கள் தொடர்பில் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டதாக அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.

அந்த மாற்றங்களுக்கான திறவுகோல் வெளிப்படைத்தன்மை மற்றும் நல்லாட்சி, திறமையான ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் அனைத்து இலங்கையர்களையும் ஈடுபடுத்தும் பொதுக் கலந்தாய்வை எளிதாக்கும் சீர்திருத்தங்கள், குரல்களின் பன்முகத்தன்மையை பிரதிநிதித்துவப்படுத்துவதை உறுதி செய்வதாக அமையும் என்று இந்த சந்திப்பினை மேற்கோள் காட்டி தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.