சிறிலங்கா அரசாங்கம், மாகாண சபை முறைமையைப் பலப்படுத்துவதற்கு ஆளுநர்களின் அதிகாரங்களை குறைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் ஆராயுமாறு தேசிய சமாதான பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ள தேசிய சமாதான பேரவை இது குறித்து ஆராய்வதற்கு அமைச்சர்கள் மட்டத்திலான குழுவொன்றை நியமிக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
நீண்ட காலமாக ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் மாகாண சபை தேர்தல்களை விரைவில் நடத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என சிறிலங்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூறியிருந்தார்.
இதுவரவேற்கப்பட வேண்டிய விடயம்.
இதனை நடைமுறைப்படுத்துவதன் முதற்படியாக, மாகாண ஆளுநர்களின் அதிகாரகள் குறைக்கப்பட வேண்டும்.அந்த அதிகாரங்கள் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் மாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று தேசிய சமாதான பேரவை வலியுறுத்தியுள்ளது.