பாகிஸ்தான் – இலங்கை கூட்டுப் பொருளாதார ஆணைக்குழுவின் 13-வது கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக, பாகிஸ்தான் பிரதமரின் கைத்தொழில் மற்றும் உற்பத்தித் துறைகளுக்கான விசேட உதவியாளர் ஹரூன் அக்தர் கான், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
இந்தக் கூட்டத்தொடர் இலங்கையின் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
பாகிஸ்தான் பிரதமரின் விசேட உதவியாளர் ஹரூன் அக்தர் கானுடன் தூதுக்குழுவினராக அந்நாட்டின் மேலும் 05 உயர் அதிகாரிகளும் வருகை தந்துள்ளனர்.
அவர்கள் நேற்று பிற்பகல் டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK-654 என்ற விமானத்தின் ஊடாகக் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக ‘அத தெரண’ விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.



