சிறுகைத்தொழிலும் தன்னிறைவுப் பொருளாதாரமும் : தொகுப்பு வன்னியூர் கலா பாரதீ

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெழும் பாக மலையகம் இருக்கின்றது.
அவ் மலையகத்தில் தேயிலை, இறப்பர் தெங்கு போன்ற பொருளாதாரப் பயிர்கள் எந்த அளவுக்கு நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புகின்றதோ,அதே அளவுக்கு தனிமனித பொருளாதார நிலையில் மிகச் சரிந்த நிலையையே கொண்டு இருக்கின்றது.
அங்கிருந்து பொருளாதாரத்தை மேம்படுத்த என்ன செய்யலாம்? என்று தீர்மானிக்காதவர்கள் இன் னும் அடிமட்ட வாழ்வில் திக்குத் திணறிக் கொண்டே இருக்கிறார்கள். அதே நேரம் மாற்றீடாக என்ன செய்யலாம் என்று சிந்தித்து செயற் பட்டவர்களும் இருக்கிறார்கள்.
அவர்கள் மத்தியில் ஒருவராக மலையகம் “அட்டபாகை” என்னும் வாழ்விடத்தை நிரந்தரமாகக் கொண்ட “சின்னத் தம்பி பிரபாகர்” என்பவர் தொழிலதி பராக அவர் கடந்து வந்த பாதையை.. இக்கட்டுரைத் தொகுப்பு முன்னிலைப் படுத்துகிறது.
பெரும்பாலும் மலையக மக்களின் வாழ்வாதார நிலை யாவரும் அறிந்ததே. அப்படிப்பட்ட ஏழ்மை நிலை யில் உள்ள ஒரு குடும்பத்தில் பிறந்து, பாடசாலைக் கல்விக்குப் பின்னர் கலாசாலைக் கல்வியை தொடர முடியாமல் போகும் ஒரு மாணவனாகவே பிரபாகர் இருந்து இருக்கிறார்.
அதற்கு பின் நகர்ந்த காலங்களில் தனது வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்காக… தலைநகராம் கொழும்புக்கு இடம் பெயர்ந்து சென்றார். அங்கே சப்பாத்து, தோற்பை, கைப்பை செய்யும் சிறுகைத் தொழிலைக் கற்று அதனை சிறிது காலம் தொழிலாகவே செய்த வண்ணம் இருந்திருக்கின்றார்.
பிற்பட்ட காலத்தில் மைத்துனரின் உதவியோடு சிலைகள் செய்யும் தொழிலில் ஈடுபட்டு அதனையும் முழுமையாக கற்றுத் தேர்ந்தார்.
நகர வாழ்க்கை பொருளாதார நிலையில் பாதிப்பை ஏற்படுத்த மீண்டும் அவருக்கு மலையகம் நிரந்தர வதிவிடம் ஆனது. மறுபடியும் விட்ட இடத்தில் இருந்து வாழ்க்கை யைத் தொடங்க வேண்டிய சூழ்நிலை. சிலைகள் செய்யும் திறனை நம்பி அதையே கையில் எடுத்தார். பலரது கேளிக்கைகள், வீண் பேச்சுக்கள் எதிர் மறைக் கருத்துக்கள் இவையெல்லாம் தாண்டி அவரது முயற்சி தொடர்ந்தது.
அப்போதைய காலம் வீட்டிலே சிலைகள் வைத்து வணங்கக் கூடாது என்ற மனநிலை மலையக மக்களிடம் இருந்தது. இந்த மன நிலையை மாற்ற எண்ணியதோடு… பிரபாகர் தான் கற்ற பாடசாலை தொடங்கி பல பாடசாலைகளுக்கு சரஸ்வதி பூஜை காலங்களில் பல கொலுப் பொம்மைகளை இலவசமாகக் கொடுத்து அறிமுகம் செய்து வைத்தார். சிலரது வீடுகளுக்குக் கூட இலவசமாக பொம்மைகளை அன்பளிப்பு செய்தார். நாளடைவில் அவர்களினது மன நிலை மாறியது.
அவரது சிற்பத்தொழில் உயர்வை எட்ட ஆரம்பித் தது. இன்று முப்பது ஆண்டுகள் கடந்து வடக்கு கிழக்கு எனப் பல மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்வதோடு… புதிய புதிய பலவித சிலைகளைக் கண்டு பிடித்து வியாபார உத்திகளை மேற் கொண்டுள்ளதன் பயன் இத் தொழில் விருத்தி பெரும் மன நிறைவைத் தருகிறது.
இருநூறுக்கும் மேற்பட்ட சிற்ப அச்சுக்கள் கைவசம் உள்ளதாயும். காலத்தின் நிலையறிந்து பல சிற்பங்கள் காணமல் போவதாயும் அவர் சொல்கிறார்.
இன்றைய நிலையில் இத்தொழிலை எனது மனைவியும் பழகி அவரும் ஒரு சிற்பக் கலைஞராக எனக்கு பக்க பலமாக இருக்கிறார்.  எனது தொழில் நிலையத்தில் சிங்கள தமிழ் என்ற பாகுபாடின்றி பலரும் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இதனால் சமூகத்தின் மத்தியில் எனக்கு நல்ல மதிப் பையும் சிற்பத் தொழில் பெற்றுத் தந்திருக்கின்றது.  என்னைப் போல பலரும் முயற்சியை எடுத்து மேன் நிலையில் தன்னிறைவுப் பொருளாதாரத்தை அடைய வேண்டும் என்பதே எனது வேண்டுகோள் என்பதாக தனது கருத்தை பதிவு செய்தார்.