இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடலுக்கு சிறிதரன் எம்.பி. அஞ்சலி

இந்தியாவில் தமிழ்நாட்டின் சென்னை சி.பி.ஐ. அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

நல்லகண்ணு (வயது 101) உடல்நலக்குறைவால் நேற்று புதன்கிழமை (25) காலமானார். சென்னையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.