அண்மையில் சீனாவுக்கு விஜயம் செய்திருந்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சினோபெக் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், நிறுவனம் இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதில் ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய சப்ரி, தனது சமீபத்திய சீன விஜயத்தின் போது, சீன நிதி மற்றும் வெளிவிவகார அமைச்சர்களையும், சீனாவின் EXIM வங்கியின் தலைவரையும் சந்தித்து, ஊக்குவிப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக நகரத்தில் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்வதற்கு சைனா ஹார்பர் பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விருப்பம் தெரிவித்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.