வாருங்கள் சிங்கள சகோதர சகோதரிகளே ஒன்றாக சேர்ந்து நாட்டை மீட்போம்-சிறீதரன்

160 Views

ஒன்றாக சேர்ந்து நாட்டை மீட்போம்

வாருங்கள் சிங்கள சகோதர சகோதரிகளே ஒன்றாக சேர்ந்து நாட்டை மீட்போம். உங்கள் போராட்டத்தை நாங்கள் மதிக்கின்றோம் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன், உங்களை போன்ற இளைஞர்கள் இப்போதும் சிறையில் தமிழ் அரசியல் கைதிகளாக உள்ளனர் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய தினம் பாரளுமன்றில் உரையாற்றிய அவர்,

“தமிழ் அரசியல் கைதிகளையும் சிந்தியுங்கள். நாம் அன்று அழிக்கப்பட்ட போதும் கூட சிங்கள மாணவர்கள், மக்கள் எங்களுக்காக போராடவில்லை. இன்று தான் நீங்கள் எல்லாவற்றையும் புரிந்துகொண்டீர்கள். வாருங்கள் ஒன்றாக போராடுவோம்.   2009 ஆம் ஆண்டு, எங்கள் குழந்தைகள் கொல்லப்பட்ட போது, இங்கே பால் சோறு வழங்கி தேசியக் கொடி வழங்கி மகிழ்ந்தவர் ராஜபக்ச குடும்பத்தினர்.

இன்று அதே தேசியக் கோடியை ஏந்திக்கொண்டு மக்கள் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். பல ஆயிரக் கணக்கான குழந்தைகளை மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்தினரிடமே ஒப்படைந்தோம்” என்றார்.

Leave a Reply