ஜனாதிபதி இல்ல முற்றுகை; 45 பேர் கைது! பொலிஸ் அதிகாரி ஒருவர் உட்பட 5 பேர் காயம்!

153 Views

ஜனாதிபதி இல்ல முற்றுகை

கொழும்பில் மிரிஹானவில் ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் ஜனாதிபதி பதவி விலகக் கோரி நேற்றிரவு ஆரம்பமான ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஒரு பெண் உட்பட 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொருளாதார நெருக்கடியால் சீற்றமடைந்த மக்கள் நேற்றிவு சுயமாக அரசுக்கு எதிராகத் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்களை அடக்க பொலிஸார் கண்ணீா் புகைக்குண்டு வீசியும் நீர்த்தாரை பிரயோகம் செய்தும் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதல்களில் இரண்டு ஊடகவியலாளர்கள் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.

இந்த மோதலில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட ஐவர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள, இதேவேளை, மேலும் அதிகளவானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றபோதும் இது குறித்த உத்தியோகபூா்வ உறுதிப்படுத்தல்கள் இதுவரை இல்லை.

பொலிஸ் பஸ் ஒன்று, பொலிஸ் ஜீப் ஒன்று மற்றும் இரு மோட்டார் சைசக்கிள்கள் எரிக்கப்பட்டன.

மக்கள் போராட்டம் வெடித்த நிலையில் நேற்றிரவு அமுல் செய்யப்பட்ட ஊரடங்கு இன்று அதிகாலை 5 மணி முதல் நீக்கப்பட்டுள்ளது.

எனினும் நுகேகொடை – மிரிஹான பகுதியில் ஆரம்பித்த ஆா்ப்பாட்டம் கொழும்பில் வேறு பர பகுதிகளிலும் பரவி உள்ளதால் மேலும் ஊடரங்கு விதிக்கப்படும் சாத்தியம் உள்ளதாகக் கருதப்படுகிறது.

அத்துடன், ஏப்ரல் 03 ஆம் திகதி நாடு முழுவதும் தன்னெழுச்சிப் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் பிராந்தி ரீதியாகவே அல்லது நாடு தழுவிய ரீதியிலோ மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படலாம் எனவும் கருதப்படுகிறது.

Tamil News

Leave a Reply