முல்லைத்தீவில் உள்ள களிக்காடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இந்த ஆண்டுக்கான மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், மழைக்கு மத்தியிலும் இத்துயிலும் இல்லப் பகுதியில் சிரமதானப் பணிகள் நேற்று (16) மாலை ஆரம்பிக்கப்பட்டது.
களிக்காடு மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவினால் இந்த சிரமதானப் பணிகள் நடத்தப்பட்டன.
திர்வரும் 27ஆம் திகதி உணர்வுபூர்வமாக நடைபெறவுள்ள மாவீரர் நாள் நினைவேந்தலில் அனைத்து மாவீரர்களின் பெற்றோர்களையும் உறவுகளையும் கலந்துகொள்ளுமாறும், நடத்தப்படும் முன்னாயத்த பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் பணிக்குழுவினர் அழைப்பு விடுக்கின்றனர்.



