ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவராக ஷோபினி குணசேகர, மொஸ்கோவில் உள்ள கிரெம்ளின் மாளிகையில் வைத்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் தனது நியமனக் கடிதத்தை உத்தியோகபூர்வமாக கடந்த 15 ஆம் திகதி சமர்ப்பித்தார்.
இந்த நிகழ்வில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, பரஸ்பர மரியாதை மற்றும் மூலோபாய பங்காளித்துவத்தின் அடிப்படையில் இலங்கையுடன் உறவுகளை வலுப்படுத்த ரஷ்யா தயாராக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்தார்.
‘டிட்வா’ (Ditwah) சூறாவளியினால் ஏற்பட்ட அழிவுகளின் போது ரஷ்யா வழங்கிய ஆதரவிற்கும் ஒருமைப்பாட்டிற்கும் இலங்கை மக்கள் சார்பில் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவரான ஷோபினி குணசேகர, தனது நன்றிகளைத் தெரிவித்தார்.
அத்துடன், நீண்ட கால நட்பு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், இருதரப்பு உறவுகளைப் புதுப்பிக்கவும் இலங்கை விரும்புவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவரான ஷோபினி குணசேகர தெரிவித்தார்.



