யாழில் “கடந்த காலத்தின் நிழல்கள்” புகைப்படக் கண்காட்சி

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சர்வதேச விருதுபெற்ற ஆவணப்பட புகைப்படக் கலைஞர் தர்மபாலன் திலக்சனின் புதிய புகைப்படக் கண்காட்சி “Shadows of the Past” கடந்த 8 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை இல, 50 கண்டி வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கலம் கலாச்சார மையத்தில் நடைபெறறது.

இந்தக் கண்காட்சி இலங்கையின் உள்நாட்டுப் போருக்குப் பிறகு நிலங்கள், வீடுகள், மக்களின் நினைவுகளில் பதிந்த காயங்களையும் அமைதியான நினைவுகளையும் பதிவு செய்கிறது.

போரின் நேரடி காட்சிகளுக்கு அப்பால், அதன் நிழல்களில் வாழும் மக்களின் உணர்வுகளையும் மனநிலையையும் திலக்சன் தனது புகைப்படங்களின் வழியே வெளிப்படுத்தியுள்ளார்.