செம்மணி புதைகுழியில் கடந்த 2025,யூன், 23, 24, 25 தினங்களில் செம்மணி மனிதப் புதைகுழி மீதான இருள் நீங்கவும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்திற்கு சர்வதேச நீதி கோரியும் யாழ்ப்பாணத்தின் செம்மணி பகுதியில் ”அணையா விளக்கு” போராட்டம் “மக்கள் செயல்” என்கிற தன்னார்வ இளையோர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டு அணையாவிளக்கு ஏற்றும் சிறு தூபி அங்கு அமைக்கப்பட்டு அதில் தீபம் ஏற்பட்டது.
கடந்த 2025, செப்டம்பர்,27 முதல் அக்டோபர் 01, வரை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் சுழற்சி முறையிலான உண்ணாவிரதமும் அந்த தூபியில் விளக்கேற்றி ஆரம்பித்து இறைதிநாளிலும் 2025,அக்டோபர்,01, ல் தீபம் ஏற்றி உண்ணாவிரம் நிறைவு செய்யப்பட்டு பின்னர் மக்கள் ஐநா அறிக்கையை எரித்தனர்.
தற்போது நேற்று (08/10/2025) செம்மணியில் இருந்த அந்த தூபி உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.