கொரோனாவின் தீவிரத்தால் 31 நகரங்கள் தாமாக முடக்கம்

420 Views

closed கொரோனாவின் தீவிரத்தால் 31 நகரங்கள் தாமாக முடக்கம்கொரோனாப் பெருந்தொற்றின் தீவிரத்தால் நாட்டில் இதுவரை 31 நகரங்கள் தாமாக முடங்கியுள்ளன.

கடை உரிமையாளர்கள் மற்றும் நகர வர்த்தக சங்கங்கள் நேற்றுத் தாமாக முன்வந்து 15 நகரங்களில் உள்ள கடைகளை மூடுவதற்கு முடிவு செய்துள்ளன.

திருகோணமலை நகர சபை மற்றும் பிரதேச சபை பகுதிகள், கேகாலை, சிலாபம், அம்பாறை, வென்னப்புவ, கெக்கிராவ, மொனராகலை, திவுலபிட்டிய, தெரணியாகல, உரகஸ்மன்ஹந்திய, வாதுவ, பாந்துராகொட, ரிக்கிலகஸ்கட மற்றும் அலவிவ ,யாழ்ப்பாணம், கொடிகாமம் சந்தைத் தொகுதி ஆகியன இவ்வாறு மூடுவதற்கு முன்வந்துள்ளன.

இவற்றில் சில நகரங்களில் உள்ள வணிகர்கள் ஒரு வாரத்துக்கும், மற்ற நகரங்களில் இரண்டு வாரங்களுக்கும் வேறு சில நகரங்களில் மறு அறிவித்தல் வரையும் மூடுவதற்கு முடிவு செய்துள்ளனர்.

நாடு முழுவதும் ஏற்கனவே 16 நகரங்களில் உள்ள கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் நேற்றுடன் இவ்வாறு மூடப்படும் நகரங்களின் மொத்த எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.

தங்கள் நகரங்களில் கொரோனா பரவும் அபாயம் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது எனத் வர்த்தக சங்கங்கள் தெரிவித்துள்ளன.

ilakku-weekly-epaper-143-august-15-2021

Leave a Reply