127 Views
பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பற்றீசியா ஸ்கொட்லன்ட் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பற்றீசியா ஸ்கொட்லன்ட் (Patricia Scotland)புதன்கிழமை (01) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். அவருடன் மேலும் 3 பேர் அடங்கிய குழுவினரும் வருகை தந்துள்ளனர்.
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வில் விசேட விருந்தினராக பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பற்றீசியா ஸ்கொட்லன்ட் (Patricia Scotland ) பங்கேற்கவுள்ள நிலையிலேயே இங்கு வருகை தந்துள்ளார்.
பற்றீசியா ஸ்கொட்லன்ட் உள்ளிட்ட குழுவினரை விமான நிலையத்தில் வைத்து வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் குழு வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.