மன்னார் காற்றாலை திட்டத்தை முன்கொண்டு செல்ல இரகசிய கலந்துரையாடல்

மன்னாரில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள காற்றாலைத் திட்டங்களைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் உள்ளக ரீதியான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனினும், எதிர்காலத்தில் புதிய காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்களை ஆரம்பிக்காதிருப்பது தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மன்னார் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல துறை சார்ந்தவர்களுடன் அரசாங்கம் கலந்துரையாடல்களை நடாத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், மன்னாரில் கனிய மணல் அகழ்வை முழுமையாக நிறுத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அமைச்சரவை பத்திரத்தை விரைவில் சமர்ப்பித்து, அமைச்சரவையின் அனுமதியைப் பெறவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் மற்றும் தொடர்புடையவர்களுடன் நாளைய தினம் (10) விசேட கலந்துரையாடல் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும், குறித்த கலந்துரையாடல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் இதுவரை வெளியாகவில்லை.