பாதீட்டில் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை-இன்று முதல் அரச ஊழியர்கள் போராட்டம்

268 Views

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பை முன்வைக்காத காரணத்தினால் அனைத்து அரச ஊழியர்களும் இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.

கடந்த 2016ஆம் ஆண்டு முதல் அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை என கூட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் நிலையத்தின் செயலாளர் தம்மிக்க முனசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடல் இடம்பெற்ற போது அது தொடர்பில் பரிசீலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டதாக செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply