குறிகட்டுவான் மற்றும் நயினாதீவு பகுதிகளில் கடற்றொழிலாளர்களின் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்து தரப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் உறுதியளித்துள்ளார்.
குறிகாட்டுவான் மற்றும் நயினாதீவு கடற்தொழிலாளர்களைச் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது, அப்பகுதி கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சவால்கள், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்துவதற்கான துறைமுக நிலைமைகள் ஆகியவை குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து கடற்றொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக தகுந்த தீர்வுகளை விரைவாகப் பெற்றுத் தருவதாகவும், அவர்களின் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் உறுதியளித்துள்ளார்.



