ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்!

ரஷ்ய வெளிவிவகார பிரதி அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko) ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (31) பிற்பகல் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

அவருடன், ரஷ்ய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் உயர்மட்ட அதிகாரியொருவரும் உத்தியோகபூர்வ பிரதிநிதிகள் குழுவில் இணைந்து வந்துள்ளார். அவர்கள், இந்தியாவின் புதுடெல்லியில் இருந்து இந்திய விமான சேவைக்கு சொந்தமான ஏ.ஐ.-281 என்ற விமானம் மூலம் மாலை 4.20 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சரை துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித்த ருவான் கொடிதுவக்கு, இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் உள்ளிட்ட அதிகாரிகள் குழு, கட்டுநாயக்க விமான நிலைய சிறப்பு விருந்தினர் மண்டபத்தில் வரவேற்றனர். ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சரின் விஜயம் இலங்கை – ரஷ்ய இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.