ஆபிரிக்க நாடுகளின் தொழில்நுட்பத்தை உயர்த்த ரஸ்யா திட்டம்

தன்னிறைவான நிலையில் தொழில்நுட்ப வளர்ச்சிகளை ஆபிரிக்க நாடுகள் அடைவதற்கு தேவையான உதவிகளை வழங்கு வதற்கு ரஸ்யா தயாராக இருப்பதாக ரஸ்யாவின் வர்த்தக பிரதிநிதி அலக்சே அன்றீவ் இந்தவாரம் வழங்கிய நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மொறொக்கோவின் நெருக் கிய நட்புநாடாக வருவதற்கு ரஸ்யா விரும்புகின்றது. மொறொக் கோவின் இலத்திரனியல் தொழில் நுட்பத்தை தேசிய அளவில் உயர்ந்தி 2030 ஆம் ஆண்டு அளவில் அது ஏனைய நாடுகளின் தயவில் தங்கியில்லாத நிலையை ஏற்படுத்த ரஸ்யா உதவிகளை வழங்கும்.
ஆபிரிக்க நாடுகள் கனிமவளங்களை அதிகம் கொண்டுள்ள போதும் அவர்களின் தொழில்நுட்ப வளர்ச்சி மிகவும் குறைவாகவே உள்ளது. ரஸ்யாவிற்கு ஆபிரிக்காவின் கனி மவளத்தை கைப்பற்றும் திட்டமில்லை மாறாக அவர்களின் தொழிலநுட்ப வளர்ச்சிக்கு உதவுவதன் மூலம் அவற்றை பாதுகாக்கும் வல்ல மையை ஆபிரிக்க நாடுகளுக்கு வழங்க ரஸ்யா விரும்புகின்றது.
கணினி மென்பொருட் களை வழங்கு வது மட்டுமல்லாது, அவற்றை ஆபிரிக்க நாடு
கள் சொந்தமாக உற்பத்தி செய்யும் தகமை யையும் ஏற்படுத்தும் உதவிகளை நாம் வழங்கவுள்ளோம். கணினி தொழில்நுட்பம், பங்குச்சந்தை, டிஜிற்றல் சந்தைவாய்ப்பு, செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு, தொலைதொடர்பு, நவீன போக்குவரத்து வசதிகள் என்பவற்றை வழங்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ரஸ்யாவின் இந்த உதவிகள் தொழில் நுட்பத்தில் மேற்குலக நாடுகளில் ஆபிரிக்க நாடுகள் தங்கியிருக்கும் நிலையை மெல்ல மெல்ல இல்லாது செய்யும் முயற்சியாகும். ஆபிரிக்க நாடுகளுக்கும் ரஸ்யாவுக்கு மிடையி லான வர்த்தகம் 2023 ஆம் ஆண்டு 24.5 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது. மொறொக்கோவுக்கான ரஸ்யாவின் விவசாயப் பொருட்களின் ஏற்றுமதி 280 மில்லியன் டொலர் களை கடந்த வருடம் எட்டியிருந்தது.