இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழு தலைவர் பதவியிலிருந்து, சிவஞானம் ஸ்ரீதரனை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கட்சியின் உறுப்பினர்கள் இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
அரசியலமைப்பு பேரவையிலிருந்து விலகுமாறு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனுக்கு கட்சி சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. எனினும் அதனை பின்பற்றாமையாலேயே, பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து அவரை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் உயர்மட்டக்குழு கூடி, இந்த விடயம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடியுள்ளது.



