213 Views
மேலும் 10 பொருட்களுக்கான இறக்குமதி தடையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா, பாதுகாப்பு மற்றும் விளையாட்டுத்துறையுடன் தொடர்புடைய 10 வகையான பொருட்கள் மீதான இறக்குமதி தடையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறைக்கு தேவையான உற்சாகப் பானங்கள், கண்காணிப்பு கெமராக்களுக்கான உதிரிப்பாகங்கள், மனை அலங்காரத்திற்கு தேவையான சேலைகள், விளையாட்டு உபகரணங்கள் ஆகியவற்றுக்கான இறக்குமதி தடை நீக்கப்படவுள்ளது.
இறக்குமதி தடை நீக்கப்படும் மூன்றாவது சந்தர்ப்பம் இதுவென அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.