நிவாரண நிதி புறக்கணிப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டோருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரண நிதியில் புறக்கணிப்பு இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

குறித்த நிவாரண நிதிக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதிலும் அதனை நடைமுறைப்படுத்தும் அதிகாரியினால் தமது தாய் புறக்கணிக்கப்பட்டதாக கூறி நேற்று (10) சண்டிலிப்பாய் – கல்லுண்டாய் பகுதியில் உள்ள ஒருவர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண கிளையில் முறைப்பாடு ஒன்றை கையளித்திருந்தார்.

கிராம சேவையாளர் ஒருவருக்கு எதிராகவே இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.  சம்பவம் தொடர்பான முறைப்பாடு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நேற்றைய தினம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.