ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களை விடுதலை செய்-யாழில் ஆர்ப்பாட்டம்

FB IMG 1626423670762 ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களை விடுதலை செய்-யாழில் ஆர்ப்பாட்டம்

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி  யாழில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று காலை 10 மணி தொடக்கம் 11 மணி வரையாக ஒரு மணி நேரம் இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப் பட்டது.

இதன் போது இந்த அரசின் அடக்கு முறை மற்றும் சர்வாதிகார போக்குக்கு எதிராக அனைவரும் ஓரணியில் திரண்டு தமது எதிர்ப்பை வெளியிட வேண்டு மென்றும் கோரிக்கையை ஆர்ப்பாட்டக் காரர்கள் விடுத்துள்ளனர்.

ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோரின் சட்டவி ரோத கைது, கல்வியில் இராணுவ மயமாக்கல், கல்வியை தனியார் மயப்படுத்தல், அடக்கு முறைகளை நிறுத்து, தனிமைப் படுத்தல் சட்டத்தை அடக்கு முறைகளுக்கு பாவிக்காதே, அடக்கு முறைகளுக்கு அடாவடிகளுக்கு ஆயுதத்திற்கு, கைதுகளுக்கு ஆசிரியர் நாங்கள் அடிபணிய மாட்டோம், இலவச கல்வியில் இராணுவம் எதற்கு, கொத்தலாவலை சட்ட மூலத்தை கிழித்தெறி, இலவசக் கல்வியை வியாபாரமாக்காதே உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோசங்களை எழுப்பினர்.

இந்தப் போராட்டத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஆசிரியர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 138

ilakku Weekly Epaper 138 July 11 2021 e1626027838912 ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களை விடுதலை செய்-யாழில் ஆர்ப்பாட்டம்

Leave a Reply