கைது செய்யப்பட்ட அனைத்து போராட்டக்காரர்களையும் விடுதலை செய் -அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றிய மாணவர்கள் கோரிக்கை

134 Views

அடக்குமுறையை நிறுத்து, கைது செய்யப்பட்ட அனைத்து போராட்டக்காரர்களை உடனடியாக விடுதலை செய் என அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றிய மாணவர்கள் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தி வருகின்றனர்.

இதில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை உடனடியாக இரத்து செய், மக்கள் சக்தியை உறுதிப்படுத்தும் புதிய அரசியலமைப்புக்காகப் போராடுவோம், இனி கடன் இல்லை, திருடப்பட்ட பணத்தை கொடு, பொருட்களின் விலை-வரிச் சுமையைத் தாங்க முடியாது, 3 வருடங்களாக முடங்கிக் கிடக்கும் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உடனடியாக திற, என கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply