இலங்கையின் புதிய ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ள சர்வதேச நாணயநிதியம் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டம் குறித்த மறு ஆய்விற்கான திகதி குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
2022 இல் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்குண்ட பின்னர் இலங்கையை மீட்சி பாதையை நோக்கி கொண்டு செல்வதில் மிகவும் கடுமையான போராட்டத்தின் மூலம் கிடைத்த பலாபலன்களை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்காக இலங்கை ஜனாதிபதியுடனும் அவரது குழுவினரும் இணைந்து பணியாற்றுவதற்கு ஆர்வமாக உள்ளோம் என சர்வதேச நாணயநிதியத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
புதிய நிர்வாகத்துடன் கூடிய விரைவில் எங்கள் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் திட்டத்தின் மூன்றாவது ஆய்வினை முன்னெடுப்பதற்கான திகதி குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.