ஈபிடிபி எனும் அரச துணை ஆயுதக்குழு தலைவர் செய்த கொலைகளை அவருடன் அன்று ஒன்றாக இருந்த சுப்பையா பொன்னையா என்பவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும் தான் சாட்சி சொல்லத் தயார் எனவும் கூறியுள்ளார்.
அவர்கூறிய அவர்கள் செய்த கொலைகளில் சிலவற்றை வெளிப்படுத்தியுள்ளார்..
1. தினமுரசு பத்திரிகை ஆசிரியர் அற்புதன் எனப்படும் ரதேஸ்.
2. இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராக இருந்த கே.எஸ். ராஜா.
3. நெல்லியடி சட்டத்தரணி மகேஸ்வரி.
4. டக்ளஸ்சின் மெய்பாதுகாவலர் ஒருவர்.
5. மலையக இளைஞர் மோகன்.
6. மலையக இளைஞர் விஜி.
7. யாழ்ப்பாணத்தை சேர்ந்த சூரி என்பவரை கொழும்பில் கடத்திக் கொலை செய்தமை.
8. கொழும்பு பார்க் வீதியில் ஈ.பி.டி.பி.க்கு சொந்தமான வீடு ஒன்றில் வதை முகாமாகம் நடாத்தப்பட்டு அங்கும் பல கொலைகள் இடம்பெற்றன எனவும் இவைகளுக்கும் தான் சாட்சி சொல்லத் தயாராகவுள்ளேன் என்றும் ஈ.பி.டி.பி உறுப்பினரான சுப்பையா பொன்னையா எனும் முன்னாள் ஈ.பி.டி.பி உறுப்பினர் யாழ் ஊடகமையத்தில் நேற்று 10/09/2025, தெரிவித்துள்ளார்.



