ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தொழில்நுட்ப உதவியுடன், உள்நாட்டுப் பொறிமுறையின் மூலம் இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூறல் செயல்முறையில் ஈடுபட அரசாங்கம் தயாராக உள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கருடனான (Volker turk) சந்திப்பின் போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடரில் இலங்கை குறித்து சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் ஆகியோருக்கிடையில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அமைச்சர் விஜித ஹேரத் விரிவாக விளக்கியதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.