விடுதலைப் புலிகள் என்பதை இலங்கை அரசு ஏற்றுக் கொண்டதாக ரவிகரன் கருத்து

விடுதலைப் புலிகள் என்பதை இலங்கை அரசு ஏற்றுக் கொண்டு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

அஹிம்சை வழியில் போராடி முடியாத நிலையிலேயே புலிகள் தோன்றியதாக ரவிகரன் சுட்டிக்காட்டினார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என இலங்கை அரசு கூறினால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது தவறு என்றும் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கூறினார்.

இதேவேளை, வன இலாகா திணைக்களமும் மகாவலி அதிகாரசபையும் மிக மோசமாக முல்லைத்தீவு, வவுனியா போன்ற இடங்களில் அட்டகாசம் செய்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

குறித்த பிரதேசங்களில் உள்ள வனங்களை அழிக்கும் வகையில் செயற்படுபவர்கள் தொடர்பில் குறித்த நிறுவனங்களில் முறைப்பாடளித்தாலும் எவ்வித தீர்வும் கிடைக்கப்பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.