ராஜபக்ஷ அரசாங்கத்தை பாதுகாக்கும் ஓருவராகவே ரணில் செயற்படுவார் – அரியநேத்திரன்

97 Views

ஜனாதிபதி வாக்களிப்பில் பலர் டலஸ் அழகப்பெருமவினை நம்பவைத்து ஏமாற்றியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

கோட்டபாய மற்றும் மஹிந்த ராஜபக்ஸவின் நிழல் அரசாங்கம்  பாராளுமன்றத்தில் இன்றும் உள்ளதாகவும் அதனை பாதுகாக்கும் ஓருவராகவே தற்போது தெரிவுசெய்யப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க செயற்படுவார் எனவும் அவர் தெரிவித்தார்.

ரணில் விக்ரமசிங்க மீண்டும் கோத்தபாயவினை அழைத்து அவருக்கு ஒரு இடத்தினை வழங்கி மீண்டும் முடிசூட வைத்தால்கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லையெனவும்  அவர் தெரிவித்தார்

Leave a Reply