13வது திருத்தத்தை முழுமையாக நிராகரிக்கும் ரணில்!

இலங்கை ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதான வேட்பாளர்கள் அனைவரும் தங்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளனர்.

எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், தங்களுக்கான ஆதரவை திரட்டும் முயற்சியில் பிரதான வேட்பாளர்கள் அனைவரும் கடும் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே, கடந்த வாரங்களில் பிரதான வேட்பாளர்கள் அனைவரும் தங்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளனர்.

இதில் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில், 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதுடன் தமிழ் வடக்கு கிழக்கிற்கு காணி மற்றும்  காவல்துறை அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதை நிறுத்தியுள்ளார்.