மாகாண சபைத்தேர்தல் கட்டாயமாக நடத்தப்படும் என்று பாராளுமன்ற சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
2026ஆம் ஆண்டுக்கான பாதீடு மீதான விவாதத்தில் மாகாண சபை தேர்தல் குறித்து முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போது அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்படி, அரசாங்கத்தினால் நடத்தப்படும் குறித்த தேர்தலில் எதிர்க்கட்சி தோற்கடிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டு வருகிறது.
“நிச்சயமாக தேர்தலை நடத்துவோம்” என்றும் பாராளுமன்ற முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.



