வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் ஆட்சியை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் அவசரமாக மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டுமென, ஜனநாயக தமிழ் கூட்டணியின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதுபற்றித் தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண ஆட்சி முறைகளை அமுல்படுத் அரசாங்கம் முன்வர வேண்டும்.ஆளுநர்களின் ஆட்சியை உடன் நிறுத்த வேண்டும்.
எல்லை நிர்ணயத்தில் உள்ள சிக்கல்களை தீர்த்து மாகாண சபை தேர்தல்களை நடத்துவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவது அவசியம்.இவற்றை செய்யாமல் தேர்தலை இழுத்தடிக்கும் எண்ணத்தில் அரசாங்கம் செயற்படுவதாகவே எண்ணத் தோன்றுகிறது.
தமிழ்த் தேசிய கட்சிகள் அனைத்தும் கூட்டமைப்பாக செயற்படுவதற்கு கோரிக்கை விடுத்துள்ளமை வரவேற்கத்தக்கது. எனினும், இதற்காக முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகள், எவை என்பது பற்றி இதுவரை தெரியாதுள்ளது. பேச்சுவார்த்தை ஊடாக கட்சிகள் இணைய முடியும்.



