இலங்கை இந்திய ஒப்பந்தம் 1987 ஜூலை 29 ல் கைச்சாத்திடப்பட்டு 1987 நவம்பர் 14 ல் 13 வது திருத்தச்சட்டத்துடன் அறிமுகமான மாகாண சபை நடைமுறையில் 09 மாகாணசபைக்கான தேர்தல் விகிதாசார தேர்தல் நடைபெற்று வந்த நிலையில் 2017 அக்டோபர் 12ல் நல்லாட்சி அரசின் காலத்தில் உள்ளூராட்சி மாகாணசபை தேர்தல் சட்ட திருத்தத்தின் ஊடாக விகிதாசார தேர்தலுக்கு முற்றுப்புள்ளி மாகாணசபை தேர்தலுக்கு வைக்கப்பட்டு புதிய எல்லை மீள் நிர்ணயம், கலப்புமுறை தேர்தலுக்கான முன்மொழிவுகள் நாடாளுமன்றில் சட்டதிருத்தம் சமர்பித்த நிலையில் மாகாணசபை தேர்தல்கள் நடைபெற வில்லை.
சட்டதிருத்தம் நல்லாட்சி அரசில் நாடாளுமன்றில் சமர்ப்பித்த சமயம் அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த இரா. சம்மந்தன் உள்ளிட்ட தமிழ்தேசிய கூட்ட மைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் 16, பேரும் எதிர்க்க வில்லை, மாகாணசபை தேர்தல் பற்றி அக்கறை காட்ட வில்லை. இதற்கான காரணம் மாகாணசபையை விடவும் புதிய அரசியல் யாப்பு திருத்தம் மேற்கொள்வதையே தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கூடிய அக்கறையும் கவனமும் செலுத்தியது.
நல்லாட்சியில் ஜனாதிபதி மைத்திரியும், பிரதமர் ரணிலும் புதிய அரசியல் யாப்பை நிறைவேற்றாமல் நயவஞ்சகத்தால் தட்டிக்கழித்து நம்பிக்கை துரோகம் செய்த பின்னர்தான் 2020,ஆகஸ்ட்,05ல் பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் இருந்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பும், ஏனைய தமிழ்தேசிய கட்சிகளுக்கும் மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டும் என ஞானம் பிறந்தது. 2023 மே 27ல் தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனிநபர் பிரேரணையாக பழைய முறையில் மாகாண தேர்தலை நடத்துமாறு நாடாளுமன்றில் சமர் பித்தார். அதனை அப்போது ஆட்சியில் இருந்த ஜனாதிபதி ரணில், அப்போது இருந்த பிரதமர் சஜீத் உட்பட எவருமே கணக்கெடுக்கவில்லை.
2024 நவம்பர் 19 தேர்தலுக்கு பின்னர் சுமந்திரன் 2023ல் சமர்ப்பித்த தனிநபர் பிரேரணையை மீண்டும் திகதியை மாற்றி தமிழரசுக்கட்சி மட்டக்களப்பு பாராளு மன்ற உறுப்பினர் சாணக்கியன் மீண்டும் 2025 ஜூலை14ல் சமர்பித்தார். அந்த பிரேரணையும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கணக்கில் எடுக்கவில்லை கிடப்பில் போட்டது.
இதேவேளை ஜனாதிபதி அநுர ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் தாம் பதவி ஏற்றால் மாகாண சபை தேர்தலை உடனே நடத்துவதாக குறிப் பிட்டும் இதுவரை மாகாணசபை தேர்தலுக்கான எந்த ஆயத்தங்களும் செய்யாத நிலையில் தற்போது எதிர்கட்சிகளுடைய அழுத்தம் காரணமாக கடந்த 2026 ஜனவரி 06 ல் மாகாணசபை தேர்தல் முறைமையைத் தெரிவு செய்வது குறித்து ஆராய்வது தொடர்பில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ முன்வைத்துள்ளார். இதன்படி 12 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட தெரிவுக்குழுக்க ளின் பெயர்களை சபாநாயகர் அறிவிப்பார். அதில் ஆளும் தரப்புக்கு 08 உறுப்பினர்களும், எதிர்கட்சிக்கு 04 உறுப்பினர் களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும் என தெரிகிறது.
இதற்கமைய, மாகாண சபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்த வேண்டும் என்பது குறித்து இந்தத் தெரிவுக்குழு ஆராயவுள்ளது. அதன்பின்னர், இது தொடர்பான தனது முன் மொழிவுகளையும் பரிந்துரைகளையும் நாடாளு மன்றத் துக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என அந்தக் குழுவுக்குப் பணிக்கப்படும்.
இந்தத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டு அதன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், மாகாண சபைத் தேர்தல் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை புதிய முறையில் தேர்தல் நடாத்தப்பட வேண்டுமாக இருந்தால் எல்லை நிர்ணயம் செய்யப்பட வேண்டிய ஒரு தேவை இருக்கின்றது. எல்லை நிர்ணயம் செய்யப்படுதல் என்பது ஒரு சுலபமான விடயம் அல்ல. ஏனெனில் இலங்கையில் வெவ்வேறு இன மக்கள் வாழுகின்ற பல்வேறு பிரதேசங்கள் காணப்படுகின்றன. எல்லை நிர்ணயம் என்று வருகின்ற பொழுது அந்த பிரதேசங்களில் பல பிரச்சனைகள் எழலாம்.
எல்லை நிர்ணயம் செய்து, உடனடியாக மாகாண சபை தேர்தலை நடாத்துவது என்பது சாத்தியமான விடயம் அல்ல. இதனால் மேலும் சில வருடங்களுக்கு இந்த தேர்தலை பிற்போட வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
பழைய முறையில் விகிதாசார முறையில் மாகாணசபை தேர்தல் இடம்பெற வேண்டும் என ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசு மனதார விரும்பியிருந்தால் இந்த தெரிவுக்குழு அமைக்கவேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே சமர்பித்த தனிநபர் பிரேரணையை நாடாளுமன்றில் சமர்பித்து அதனை அறுதிப்பெரும் பான்மையுடன் நிறைவேற்றி இருக்க முடியும்.
ஆனால் திசைகாட்டி அரசாங்கம் மாகாணசபை தேர்தலை உடனே நடத்துவதற்கு விரும்பாத காரணத்தால் தெரிவுக்குழு என்ற பந்தை விளையாட வைத்துள்ளனர். தெரிவுக்குழுவில் எதிர்கட்சி சார்பானவர்கள் பழைய முறையில் உடனே தேர்தலை நடத்துமாறு பரிந்து ரைப்பர். ஆளும் தரப்பு உறுப்பினர்கள் இல்லை 2017ல் நிறைவேற்றிய திருத்தம் தொடர்பில் ஆராயப்பட வேண்டும் என வாதிடுவர் தெரிவுக்குழுவில் ஆட்டம் முடிந்து முடிவு வரும் வரை மூன்று மாதம் காலம் கடக்கும, அறிக்கை வந்தபின்னர் மாகாணசபை தேர்தல் பற்றிய அடுத்த கட்டங்களை பேசமுடியும்.



