வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

“கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்” என்னும் தொனிப்பொருளில் இன்று வவுனியாவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்படும் 100 நாட்கள் செயல்முனைவின் 40 ஆவது நாள் கவனயீர்ப்பு போராட்டமாகவே இந்தப் போராட்டம் வவுனியா, செட்டிகுளம் பிரதேசத்தின் நீலியாமோட்டை கிராமத்தில் நடை பெற்றது.

இச்செயற்றிட்டத்தில் செட்டிகுளம் பிரதேச மக்கள், சிவில் சமூக அமைப்புக்கள், பாதிக்கப்பட்ட மக்கள், விவசாயிகள் மற்றும் நன்னீர் மீனவ அமைப்புக்கள் என பலரும் கலந்து கொண்டு கௌரவமான அரசியல்தீர்வுக்கான கோரிக்கைகளை முன்வைத்தனர்.

பதாதைகளை ஏந்தியும் கோஷமெழுப்பியும் மக்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.