வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் அழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நல்லூரில் போராட்டம்

20230328 164518 வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் அழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நல்லூரில் போராட்டம்

வவுனியா வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் அழிக்கப்பட்டமைக்கு சைவ மகா சபையின் ஏற்பாட்டில் நல்லூரில் போராட்டம் இடம்பெற்றது.

செவ்வாய்க்கிழமை (28) மாலை 5 மணியளவில் நல்லை ஆதீனம் முன்பாக சைவ அமைப்புகளின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் நடைபெற்றது.

20230328 164750 வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் அழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நல்லூரில் போராட்டம்

தொல்லியல் திணைக்களமே தமிழர்களை தொலைக்காதே, ஆதிசிவன் கோவில் தொடர்ந்து இலக்கு வைக்கப்படுவது ஏன்? , சிவனை அசைத்தவனே அவனின் திருக்கூத்தை விரைவில் உணருவாய், சிவன் சொத்தை தீண்டினால் குலமே நாசமாகும் போன்ற வாசகங்களை போராட்டகாரர்கள் தாங்கியிருந்தனர்.