பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக ஜெனிவாவில் போராட்டம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் கைதுகளுக்கு எதிராக ஜெனிவா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் முன்பாக நேற்று ஆா்ப்பாட்ட ஊா்வலம் ஒன்று நடத்தப்பட்டது. இதில் பெருமளக்கு சிங்கள மக்கள் கலந்துகொண்டிருந்தனா்.

கடந்த காலங்களில்  அரசாங்கத்துக்கு எதிராக தமிழ்த் தரப்பினா்தான் ஜெனிவாவில் ஆா்ப்பாட்டங்களை நடத்தி வந்தனர். அந் நேரங்களில் சிங்கள மக்கள் மேற்கு நாடுகளுக்கு எதிராகவும், தமிழ் அமைப்புக்களுக்கு எதிராகவும் பேரணிகளை நடத்துவதுதான் வழமை.

இந்நிலையில், இம் முறை குறித்த போராட்டத்தில் அரசுக்கு எதிராக சிங்கள மக்கள் களம் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்  “போா்க்காலத்தில் இடம்பெற்ற கொடூரங்கள், பொருளாதாரக் குற்றங்கள், உயிா்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்புக்கூறப்பட வேண்டும் என  சட்டத்தரணி நுவான் போபகே இன்று மனித உரிமைகள் பேரவையில் நிகழ்த்திய உரையில் வலியுறுத்தியுள்ளார்.