கிவுள்ஓயா திட்ட எதிர்ப்பு போராட்டம்: பாராளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம் கருத்து

கிவுள்ஓயா திட்டத்தில் தமிழ் மக்களுக்கு விரோதமான செயற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அதற்கு எதிராக மக்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்துவதற்கு தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளது.

இதற்கு அமைவாக இன்றைய தினம் பொது அமைப்புகளுக்கும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று வவுனியா மாவட்ட தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இடம் பெற்றது.

எனினும் குறித்த சந்திப்பில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, சிறிடெலோ கட்சியின் சார்பில் ஒருவரும் கலந்து கொண்டதாக  பாராளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம் தெரிவித்திருந்தார்.

எனினும் குறித்த கூட்டம் இடம்பெற்றபோது அனைத்து தமிழ் கட்சிகளும் இந்த மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தருவார்களா? அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கையொப்பமிட்டு கிவுள் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு தூதரகங்களுக்கு கடிதங்களை அனுப்புவார்களா? அதற்கு தயாராக உள்ளார்களா என்ற கேள்வியை பொது அமைப்புக்களின் சார்பில் ஒருவர் எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம்,

அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் இன்று இது தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக தெரிவித்ததுடன், ஏற்கனவே தமிழ் கட்சிகள் கூடி  கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று இருந்தது எனினும் அதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மாத்திரமே கலந்து கொள்ளவில்லை என்ற போதிலும் அவர்களும் குறித்த போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை தெரிவிப்பதாக குறித்த கலந்துரையாடலின் போது தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று பொது அமைப்புக்களுடனான குறித்த கூட்டத்திற்கு எந்தெந்த கட்சிகள் கலந்து கொண்டு என  ஊடகவியலாளர் வன்னி பாராளுமன்ற உறுப்பினரிடம் கேள்வி எழுப்பிய போது, தாங்கள் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுத்ததாகவும் எனினும் தமிழரசு கட்சி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் ஸ்ரீ டெலோ சார்பில் ஒருவரும் கலந்து கொண்டிருந்ததாக தெரிவித்திருந்தார்.