தங்கிவாழும் நிலையை உருவாக்கி மக்கள் இறைமையைத் தேசியத்தை ஒடுக்கல் தடுக்கப்படல் வேண்டும் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 375

டாவோஸ் உலகப் பொருளாதார மாநாட்டில் அமெரிக்க அரசத் தலைவர் டொனால்ட் ட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தின் ஓராண்டை சனவரி 20இல் நிறைவு செய்த நிலையில் மறுநாள் சனவரி 21இல் ஆற்றிய உரை புதிய  உலக அரசியல் முறைமையில் அமெரிக்கா தனது பழைய ஒரு முனைவாக்கத்தன்மையை மீள்கட்டமைப்பதற்குச் செய்யும் கடும் முயற்சியினை உலகு தெளிவாகக் கண்டு கொண்டது. இது குறித்து யோன் கிரேஸ் (John Crace)  பிரித்தானியாவின் த கார்டியன் ஆங்கில நாளிதழில் 22.01. 26 இல் Along comes Trump and our emperors have no clothes  என்ற ஆங்கிலத்தலைப்பில் ஆராய்கையில் அடுத்து என்ன சொல்வது அல்லது செய்வது என்பது குறித்து வெட்கப்படாத நிலையும் ஆனால் தாங்களே எல்லாவற்றையும் செய்தோம் என உரிமை கோரும் போக்கும் தெளிவாக இருந்தது என அழகாக விளக்கியிருந்தார்.  மற்றொரு ஆய்வாளர் டேவிட் சிமித் வாசிங்டனில் இருந்து ட்ரம்ப் தன்னை வெள்ளையரின் நம்பிக்கையாக தனது இனவாதத்தில் தோய்ந்த டாவோஸ் உரையில் வெளிப்படுத்தினார் (Trump paint himself as great white hope in racism – drenched Davos Speech) தலைப்பில் செய்த ஆய்வில் அரசத்தலைவரின் சோமாலிய வசைப்பொழிவையும் அவருடைய குடிவரவு கொள்கை வகுப்பாளரான ஸ்ரீபன் மில்லர்சின் அதிதீவிர வலதுசாரி கருத்துக்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஐரோப்பியத் தலைமைகளைக் கேவலமாகப் பேசியதையும்  உபதலைப்பாக அமைத்து ஆய்வு செய்திருந்தார்.
அத்துடன் டேவிட் சிமித் “டொனால்ட் ட்ரம்ப் பீரங்கிக் குழாய் போன்றே தனது உரையை நிகழ்த்தினார் எனக் கூறிவிட்டு பிரான்சின் அரசத்தலைவர் இம்மனுவல் மக்ரோன் அணிந்திருந்த ‘ஏவியேற்றர் சண் கிளாஸ்’ Aviator Sun Glass) ஐ கேலி செய்தார். கனடா அமெரிக்காவாலேயே வாழ்கிறதென கனடாவின் பிரதமர் மார்க் கானியை வசை பாடினார். சுவிஸ் தங்களாலேயே நல்ல நாடாக இருப்பதாகத் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டார். டென்மார்க் ஆறுமணித்தியாலத்துள் கிறீன்லாந்தை இழக்க விருந்த நேரத்தில் தாங்களே தோண்டி நிமிர்த்தி விட்டதாக வியந்து கொண்டார்.  ஆனால் எல்லாவற்றையும் உடைக்கும் தனது சொல்லாட்சிக்கலைக்கு மத்தியில் தான் ஐரோப்பாவை ஒன்றுபடுத்தவே முயல்வதாகப் பிரகடனம் செய்தார். இதுவே அவருடைய இருண்ட நயவஞ்சகமான தீய நோக்குடைய திட்டமாக உள்ளது” எனத் தனது கருத்தையும் பதிவிட்டிருந்தார்.
அமெரிக்க முன்னாள் அரசத்தலைவர்களில் ஒருவரான தியடோர் ரூஸ்வேல்ட் தனது வெளிவிவகாரக் கொள்கை குறித்து ரஸ்ய -யப்பான் போர் நேரத்தில் விளக்குகையில் “ நான் மென்மையாகப் பேசுவேன் ஆனால் கையில் தடியொன்றை வைத்திருப்பேன்” எனக்கூறிச் செயற்பட்டு 1906ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசையும் தனதாக்கிக் கொண்டார். இதனை மீள்நினைவுறுத்திய ஆய்வாளர் அடம் கப்பட் “ வெறித்தனமாகப் பேசுவதும் கையில் தடியினை வைத்திருப்பதுமே ட்ரம்பின் வெளிவிவகாரக் கொள்கை என்ற ஆய்வினை வெயிட்டுள்ளார். அமெரிக்கா தனது வெளிவிவகாரக் கொள்கையை மீளுருவாக்குவதில் பாதிவழியில் நிற்கிறது. ஆனால் இதில் வென்றால் என்ன தோற்றால் என்ள அமெரிக்காவில் ஆதரவை ஏற்படுத்தாது எனப் ‘பொரின் அவையர்ஸின் ஆய்வாளர்கள் சாள்ஸ் குப்புச்சன் பீட்டர் ரூபௌட்டிஸ் அந்த வெளிவிவகார ஆய்விதழில் தெளிவாக விளக்கியுள்ளார்.
இந்நிலையில் ட்ரம்ப் தன்னை எட்டு போர்க்களங்களில் அமைதியை ஏற்படுத்தியவராக அதில் இந்திய பாகிஸ்தான் கடந்த ஆண்டு போரும் அடங்குமென கூறுகின்றார் என்பதை எடுத்து நோக்கின் இவர் வெளியுலகத்தில் தன்னைச் சாதனையாளராக காட்டி அமெரிக்காவில் உள்நாட்டில் ஆதரவைபை பெற முயற்சிக்கின்றார் என்பதும் தெளிவாகிறது.
இதில் அவர் அமெரிக்காவை உலகின் நகரகாவலராகவே பிரடனப்படுத்தியமையை உலகில் கடந்த சில மாதங்களில் நடைபெற்ற அமெரிக்காவின் அனைத்துலக சட்டங்களைத் தூரவீசிய வரலாறுகள் எடுத்துரைக்கின்றன. இவ்வாரத்தில் உலக சுகாதார நிறுவனத்துக்குத் தான் கடந்த ஆண்டு கொடுத்த விலகல் அறிவிப்பை நடைமுறைப்படுத்தி அமெரிக்கா விலகியுள்ளது. பில்கேட் அவர்களே உலக சுகாரதார நிறுவனம் முக்கியமானது என்கிற கருத்தை வெளியிட்டுள்ளார். உலகில் பெருந்தொற்றுக்கள் ஏற்பட்டால் அமெரிக்கா உட்பட முழு உலகுமே பலத்த அழிவுகளைச் சந்திக்கும் என்பது யதார்த்தமான உண்மை. காலநிலைச் சமநிலையைப் பாதுகாக்கும் முயற்சியிலும் இருந்து அமெரிக்கா விலகிவிட்டது. இவை எல்லாம் அமெரிக்கா தன்னை உலகில் இருந்து தனிமையாக்கிக் கொள்வதினைத் தெளிவாக்குகின்றது.
இத்தகைய சூழலில் கனடியப் பிரதமரின் டாவோஸ் உரை மத்திய சக்தியுடை நாடுகள் இணைந்து செயற்படு வதன் மூலமே உலகைக் காப்பாற்ற முடியும் என்பது மிக முக்கிய அழைப்பாக உள்ளது.
அமெரிக்க அரசத்தலைவரின் 2வது வருகை உலக அரசியலில் தங்கிவாழ்தலை உருவாக்கி மக்கள் இறைமையை ஒடுக்கும் அரசியல் தந்திரோபாயத்தை கடந்த ஆண்டு முழுவதும் தனது நிறைவேற்று அதிகாரமுள்ள அமெரிக்க அரச அதிபர் பதவி மூலம் வெளிப்படுத்தி உலகின் புதிய அரசியல் ஒழுங்கில் அமெரிக்காவின் பழைய ஓர் முனை முனைவாக்கத் தலைமையை வரிவிதிப்புப் போர்முறை மூலமும் தன்னியக்க ஆயுதபாதுகாவல் தாக்கியழித்தல் போர்முறை மூலமும் மீளநிறுவ எடுக்கும் முயற்சிகளை நியாயப்படுத்த உலகின் சட்ட ஒழுங்குமுறைகளைத்தானே மீறி வந்தார். இத்தகைய போக்கும் ஒருகாலனித்துவ ஆட்சி முறைமை என்பதையே கனடாவின் பிரதமரின் உரையும் அதை மாற்ற முயலும் அவரின் அழைப்பும் எடுத்து விளக்குகிறது.
மேலும் தற்போது ஐக்கியநாடுகள் சபைக்கு சமாந்தரமான அமெரிக்கா சார்பான உலக சபையினை நிறுவும் உடன்படிக்கையையும் அவர் எதிர்பார்த்த 35 நாடுகளில் 20 மட்டுமே கலந்து கொண்ட நிலையில் பிரான்ஸ், பிரித்தானியா, நோர்வே,  சுவிடன் போன்ற ஐரோப்பாவின் முக்கிய நாடுகளே கலந்து கொள்ளாத நிவையில்  22.01.2026 இல் டாவோசில் கையெழுத்திட்டுள்ளார். இதன் வழி தன்னை டீல்மேக்கர் அரசியல் தலைமை எனத் தானே புகழவும் செய்துள்ளார்.  இவரின் ஐக்கிய நாடுகள் சபைக்குச் சமாந்தரமான தனக்குச் சார்பான உலகச் சபையை அமைத்தல் என்ற உள்நோக்கின்  முதல் வெளிப்பாடாகக் காசாவின் அமைதியை நிறுவும் 60 நாடுகளின் இந்தக்கட்டமைப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ள 60 நாடுகளும் வைப்பு நிதியாக ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை வைப்பு செய்தல் என்னும் முன்நிபந்தனையானது இதுவரை இஸ்ரேல் தன்னுடன் வரலாற்றுத் தொடர்புள்ள பலஸ்தீனிய தேசஇனத்துடன் இணக்க அரசியலுக்குச் சிந்திக்காததின் விளைவாக இஸ்ரேலின் இறைமை பெயரளவிலேயே இருக்க அனைத்துலக நாடுகள் அறுபதுடன் இஸ்ரேலின் இறைமை பகிர்வாகி கூட்டாண்மை பங்காண்மை கொண்ட உலகின் நிலப்பரப்பாக காசா நீள்கரை மாறுவதை இனி இஸ்ரேலினால் கூடத் தடுக்க இயலாது என்பதே உண்மை.
மக்களின் அரசியல் எதிர்காலத்தினைத் தீர்மானிக்க அவர்களில் இருந்து என்றுமே பிரிக்க இயலாத அவர்களின் சுயாட்சி உரிமை என்னும் மக்கள் உரிமையைச் செயற்படாது செய்வதன் மூலமே அவர்களின் இந்த மண் எங்களின் சொந்த மண் என்கின்ற மக்கள்இறைமையுணர்வை அவர்கள் செயற்படுத்துவதற்கு அடிப்படைத் தளமாக உள்ள தாயக தேசிய தன்னாட்சியுடன் கூடிய அவர்களின் தேச ஒருமைப்பாட்டை உடைக்கும் தந்திரோபாயம் உனக்கு நான் பெரியன செய்கின்றேன் என்று ஒருவரின் நில உரிமையை அதில் அவர் விரும்பியவாறு உழைக்கும் உரிமையைக் கட்டுப்படுத்துகின்ற பொழுது இயல்பாகவே அந்த தேசமக்கள் அதனைச் செய்பவருக்கு அடிமையாவதை தமது விருப்பின் பெயரில் ஏற்பதற்கான சமுக பொருளாதார அரசியல் ஆன்மிக அழுத்தங்கள் அந்த மக்கள் இனத்தின்  மேல் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகையில் அதனையே அம்மக்கள் தமது சமகால வாழ்வுக்கான நம்பிக்கையாக வழியாக ஏற்கும் அளவுக்குத் திட்டமிட்ட முறையில் வல்லாண்மைகள் பிராந்திய மேலாண்மைகள் முதலாளித்துவ மேலாண்மைகள் நேரடியாக அனைத்துலக சட்டங்களை செயலற்றதாக்கி உலகின் எந்த மூலையிலும் நிலைப்படுத்த தமது தொழில்நுட்ப தமது படைபல வலிமையால் பலத்தால் தீர்மானங்களுக்கு கட்டுப்படுதல் நிதி மதி முகாமைத்துவங்கள் மக்கள் நல சேவைப்பணிகள் மருத்துவப் போக்குவரத்துச் சந்தை தேவைகள் எல்லாமே வல்லாண்மைகளின் கூட்டாண்மைக்குள் அடக்கப்பட்டு விடும். இதுவே இன்றைய உலகின் பொருளாதார அரசியல் முறைமையாக உள்ளது.
இந்த  இன்றைய ட்ரம்பின் அரசியல் தந்திரோபாயங்கள் எல்லாவற்றையும் மகிந்த ஆட்சியாளர்கள் ஈழத்தமிழர்கள் மேல் பயன்படுத்தியே உலகின் பாதுகாப்பின்மைக்கு வித்திட்டனர் என்பது இவ்விடத்தில் நினைவு கூரப்பட வேண்டியது முக்கியம். ஏனெனில் அநுர அரசும் இதே பாணியில் சென்று ஈழத்தமிழரைத் தங்களில் தங்கிவாழும் நிலையை உருவாக்கி ஈழத்தமிழர்களின் தேசிய நீக்கத்தையும் இறைமை நீக்கத்தையும் செய்து வருகின்றார்கள் என்பதை இலக்கு நினைவுறுத்தி இவ்வாறு ஈழத்தமிழர்கள் சிங்கள அரசில் தங்கிவாழும் நிலையை மாற்ற ஈழத்தமிழரின் வறுமை மற்றும் அறியாமையை நீக்கும் ஈழத்தமிழர் அமைதிக்கான சபையை நிறுவ முயற்சிக்க வேண்டுமென்பதே இலக்கின் இவ்வார எண்ணமாக உள்ளது.
ஆசிரியர்

Tamil News