ஜனாதிபதி ரணில் இலண்டனுக்குப் பயணம்

75 Views

மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் இன்று காலை எமிரேட்ஸ் விமானம் மூலம் டுபாய் நோக்கி புறப்பட்டதாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

டுபாயில் இருந்து ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் இலண்டன் செல்லவுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முதல் வெளிநாட்டு விஜயம் இதுவாகும்.

Leave a Reply